வழிபாடு
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம்

அமிர்தகடேஸ்வரர் கோவிலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்

Update: 2022-04-11 04:40 GMT
அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நேற்று வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மணிவிழா, சதாபிஷேகம், ஆயுள் ஹோமம், திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதன் காரணமாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும், இந்த கோவிலில் கடந்த மார்ச் 27-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.   

இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனால் கோவில் வளாகம், சன்னதி வீதி, மேலவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. மேலும் பக்தர்கள் வந்த வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும் பொறையாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News