வழிபாடு
திருப்பதி

திருப்பதியில் 4 நாட்களுக்கான இலவச தரிசன டிக்கெட் விற்பனை முடிந்தது

Update: 2022-04-09 05:48 GMT
திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இன்று, நாளை, நாளை மறுநாள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய 4 நாட்கள் தரிசன டிக்கெட் பெற முடியாது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தற்போது 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக வார இறுதி நாட்களில் வி.ஐ.பி பிரேக் தரிசனம் நிறுத்தப்பட்டு இலவச தரிசனத்தில் 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இலவச தரிசனம் பெற குவிந்தனர். இதனால் இன்று, நாளை, நாளை மறுநாள், ஆகிய 3 நாட்களுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் நேற்றே பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டு முடிந்தது. இன்று செவ்வாய் கிழமைக்கான தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது. அதுவும் தீர்ந்துவிட்டது.

இதையடுத்து டிக்கெட் கவுன்டர்கள் மூடப்படுகிறது. இதனால் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இன்று, நாளை, நாளை மறுநாள் மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய 4 நாட்கள் தரிசன டிக்கெட் பெற முடியாது.

புதன்கிழமைக்கான தரிசன டிக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட உள்ளது. எனவே பக்தர்கள் 4 நாட்கள் தரிசனத்தை தவிர்த்து விட்டு பின்னர் வருமாறு பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் நேற்று 60,790 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 35,106 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.36 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

இதையும் படிக்கலாம்...நாளை கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி
Tags:    

Similar News