வழிபாடு
சிம்ம வாகனத்தில் கோதண்டராமர் உலா

பிரம்மோற்சவ விழா 3-வது நாள்: சிம்ம வாகனத்தில் கோதண்டராமர் உலா

Update: 2022-04-02 03:19 GMT
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 3-ம் நாளில் உற்சவர் கோதண்டராமசாமி சிறப்பு அலங்காரத்தில் முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரை உற்சவர் கோதண்டராமசாமி சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 11 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை உற்சவருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஊஞ்சல் சேவை, இரவு 8 மணியில் இருந்து இரவு 10 மணி வரை உற்சவர் கோதண்டராமசாமி சிறப்பு அலங்காரத்தில் முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News