வழிபாடு
முட்டப்பதி

முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் கலி வேட்டை இன்று நடக்கிறது

Published On 2022-04-01 09:29 IST   |   Update On 2022-04-01 09:29:00 IST
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ‘பதி’களில் ஒன்றான ‘முட்டப்பதி’யில் உள்ள அய்யா வைகுண்டசாமி பதியில் பங்குனி திருவிழா நாட்களில் தினமும் உச்சிப்படிப்பு, அன்னதர்மம் போன்றவை நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ‘பதி’களில் ஒன்றான ‘முட்டப்பதி’யில் உள்ள அய்யா வைகுண்டசாமி பதியில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் உச்சிப்படிப்பு, அன்னதர்மம் போன்றவை நடைபெற்று வருகிறது.

விழாவின் 8-ம் நாளான இன்று (வெள்ளிக்கிழமை) கலிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. இதனையொட்டி இன்று அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, தொடர்ந்து பால்தர்மம் ஆகியவை நடைபெறும்.

இரவு 7 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஒற்றையால் விளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை ஊர்வலமாக வந்து வடக்கு வாசலில் கலிவேட்டை நிகழ்ச்சி நடைபெறும். இரவு 11 மணிக்கு அன்னதர்மம் போன்றவை நடக்கிறது.

4-ந் தேதி மதியம் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருளி பதிவலம் வருதல் நடக்கிறது. இதற்காக ரூ.1 கோடி செலவில் புதிதாக தேர் உருவாக்கப்பட்டுள்ளது.

நிறைவு நாளான 5-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி, 5 மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை முட்டப்பதி தர்ம கர்த்தாக்கள் மனோகரன் மற்றும் கைலாஷ் மனோகரன் ஆகியோர் செய்துள்ளனர்.

Similar News