வழிபாடு
சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான், புனிதநீர் நிரப்பப்பட்ட சங்குகள் அடுக்கி வைத்திருந்த காட்சி.

சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்

Published On 2022-03-27 13:21 IST   |   Update On 2022-03-27 13:21:00 IST
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் சண்முகப் பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. அப்போது 108 சங்கில் புனித நீர் நிரப்பட்டு கோவிலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடாக சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் திகழ்கிறது. இக்கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 18-ந்தேதி தீர்த்தவாரியுடன் தொடங்கியது. விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்தநிலையில் நேற்று விடையாற்றி விழா நடந்தது. இதனையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து சண்முகப் பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. அப்போது 108 சங்கில் புனித நீர் நிரப்பட்டு கோவிலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

முன்னதாக சிறப்பு நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெற்றது. பின்னர் இரவு சண்முகப்பெருமான் வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Similar News