வழிபாடு
நாகர்கோவில் வடசேரி வண்டிமலைச்சியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக விழா

நாகர்கோவில் வடசேரி வண்டிமலைச்சியம்மன் கோவிலில் மண்டலாபிஷேக விழா

Published On 2022-03-27 12:28 IST   |   Update On 2022-03-27 12:28:00 IST
வண்டிமலைச்சியம்மன் சமேத வண்டி மலையான் சாமி கோவிலில் மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு கடம் புறப்பாடு, நையாண்டி மேளம் முழங்க சாமி அம்பாளுக்கு போன்றவை நடந்தன.
நாகர்கோவில் வடசேரி ரவிவர்மன் புதுத்தெரு வள்ளியூர் சமுதாய கோவிலான வண்டிமலைச்சியம்மன் சமேத வண்டி மலையான் சாமி கோவில் உள்ளது. இங்கு மண்டலாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, தீபாராதனையும், மாலையில் திருமுறை பாராயணம், தீபபூஜை, முதல்கால யாக வேள்வி பூஜை, மூலமந்திர ஹோமம், தீபாராதனையும் நடைபெற்றது. 2-வது நாளில் திருமுறை பாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்ணியா வாசனம், பஞ்சகவ்ய பூஜை, சோம கும்ப பூஜை, கடம் புறப்பாடு, நையாண்டி மேளம் முழங்க சாமி அம்பாளுக்கு மண்டலாபிஷேகம் போன்றவை நடந்தன.

இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Similar News