வழிபாடு
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா

Published On 2022-03-24 12:44 IST   |   Update On 2022-03-24 12:44:00 IST
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பெருவிழா நாட்களில் தினமும் காலை வெள்ளி பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களிலும் பெருமாள் தாயார் வீதி உலா நடக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் ஒப்பிலியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கடந்த 20-ந்தேதி பங்குனி பெருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை வெள்ளி பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களிலும் பெருமாள் தாயார் வீதி உலா நடக்கிறது.

நேற்று பெருமாள் வெள்ளி கருட வாகனத்திலும், தாயார் வெள்ளி அன்னபட்சி வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது. வருகிற 28-ந்தேதி காலை 7 மணிக்கு தேசிக ரோடு பெருமாள் தாயார் தேரில் எழுந்தருளுகிறார்.

9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இ.ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Similar News