வழிபாடு
ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம்

ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம்: தரிசனத்துக்கு அலைமோதிய பக்தர்கள்

Published On 2022-03-19 12:33 IST   |   Update On 2022-03-19 12:33:00 IST
Thirukalyanam, Srivilliputhur Andal Temple, Andal, திருக்கல்யாணம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், ஆண்டாள்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஆண்டாள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பங்குனி உத்திரமான நேற்று காலை 7 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு ஆண்டாள்-ரெங்கமன்னார் கீழ ரதவீதியில் செப்புத்தேரில் எழுந்தருளினர். பின்னர் செப்புத்தேரோட்டம் நடந்தது. ரத வீதிகள் வழியாக பக்தர்கள் “கோவிந்தா, கோபாலா...” என கோஷமிட்டு செப்பு தேரை இழுத்து வந்தனர்.

மாலை 4 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்கின. இரவு 7 மணிக்கு மேல் ஆண்டாள்- ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண மண்டபத்தில் தரிசனம் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு திருக்கல்யாண திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் வழக்கத்தைவிட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சபரிநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News