வழிபாடு
பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு

பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு 4 நாட்கள் நிறுத்தம்

Published On 2022-03-17 10:51 IST   |   Update On 2022-03-17 10:51:00 IST
பழனி முருகன் கோவிலில் இன்று (வியாழக்கிழமை) முதல் 20-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) முதல் 20-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் பங்கேற்கும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று கோவில் நிர்வாகம் சார்பில் தங்கரத புறப்பாடு நடைபெற்றது. இதில், கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு வடம் பிடித்து தங்கரதத்தை இழுத்தனர்.

முன்னதாக சாயரட்சை பூஜைக்கு பிறகு தங்க மயில் வாகனத்தில் சின்னகுமாரர் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.

Similar News