வழிபாடு
மயானக் கொள்ளை விழாவில் பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம்

மயானக் கொள்ளை விழாவில் பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம்

Published On 2022-03-04 04:46 GMT   |   Update On 2022-03-04 04:46 GMT
ஆலங்குப்பம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு அருகே ஆலங்குப்பம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசிமாதம் மயானக்கொள்ளை நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்களுக்கு மிளகாய் கரைசல் அபிஷேகம் நடைபெற்றது.

இதற்காக தேர்வு செய்யப்பட்ட 4 பக்தர்கள் கோவில் முன் அமர வைக்கப்பட்டு, 50 கிலோ மிளகாய் பொடியை கரைத்து அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பால், தயிர், இளநீர் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

விழாவில் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்
Tags:    

Similar News