வழிபாடு
வீரமாகாளியம்மன் முனீஸ்வரர் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்தனர்

வீரமாகாளியம்மன் முனீஸ்வரர் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்தனர்

Update: 2022-02-19 07:53 GMT
வீரமாகாளியம்மன் முனீஸ்வரர் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். இரவு அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது.
தஞ்சை விளார் சாலை நாவலர் நகரில் உள்ள வீரமாகாளியம்மன் முனீஸ்வரர் கோவிலில் மாசிமக திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்துவந்து அம்மனை வழிபட்டனர்.

அதனை தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். இரவு அம்மனுக்கு பூச்சொரிதல் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News