வழிபாடு
எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும்?

எந்த திசையில் தலைவைத்துப் படுக்க வேண்டும்?

Published On 2022-01-24 12:33 IST   |   Update On 2022-01-24 12:33:00 IST
படுக்கும் போது சில விஷயங்களை கண்டிப்பாக மறக்கக்கூடாது. அந்த வகையில் எந்த திசை பக்கம் தலை வைத்து படுத்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.
* கிழக்குத் திசையில் தலைவைத்துப் படுத்தால் கீர்த்தியும், புகழும் கூடும், ஆரோக்கியம் சீராகும்.

* மேற்குத் திசையில் தலைவைத்துப் படுத்தால் கனவுகள் நனவாகும்.

* தெற்குத் திசையில் தலைவைத்துப் படுத்தால் தெய்வீக சிந்தனை உருவாகும், நோய் அகலும்.

* வடக்குத் திசையில் தலைவைத்துப் படுத்தால் நோய் அதிகரிக்கும். சந்தோஷம் குறையும். அதற்குக் காரணம், காந்த சக்தி நம் உடலில் மோதும் பொழுது பிராண சக்தி விலகி விடும். இதனால் மூளை இயக்கத்தில் தொல்லை ஏற்படும். எனவே வடக்கில் தலை வைத்துப் படுக்கக்கூடாது.

Similar News