வழிபாடு
சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2022-01-22 11:25 IST   |   Update On 2022-01-22 11:25:00 IST
சட்டநாதர் கோவிலிலிருந்து கரகம் எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் புற்றடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று மாலை சட்டநாதர் கோவிலிலிருந்து கரகம் எடுத்து வரப்பட்டு கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

தொடர்ந்து இரவு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர். விழாவையொட்டி சீர்காழி நகர் பகுதியில் நேற்று வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டது.

Similar News