வழிபாடு
நடராஜருக்கு தீப மை திலகமிட்ட போது எடுத்தபடம்.

23-ந் தேதி முதல் தீப ‘மை’ பிரசாதம்

Published On 2021-12-21 03:14 GMT   |   Update On 2021-12-21 03:14 GMT
அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப மை பிரசாதம் வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்கு வழங்க கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கோவிலின் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் கடந்த நவம்பர் மாதம் 19-ந் தேதி ஏற்றப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மகா தீபம் காட்சி அளித்தது.

மகா தீப கொப்பரையில் இருந்து எடுக்கப்பட்ட தீப மை ஆருத்ரா தரிசனத்தன்று நடராஜருக்கு திலகமிடப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும். அதன்படி தீப மை நேற்று நடராஜருக்கு திலகமிடப்பட்டது.

தொடர்ந்து தீப மை பிரசாதம் வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்கு வழங்க கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்கள் அதற்கான ரசீதுகளை காண்பித்து கோவில் நிர்வாக அலுவலத்தில் தீப மை பெற்றுக் கொள்ளலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News