வழிபாடு
சமயபுரம் மாரியம்மன் கோவில்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேரோட்டம் இன்று தொடங்குகிறது

Published On 2021-12-15 09:29 IST   |   Update On 2021-12-15 09:29:00 IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுப்பது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இன்று மாலை 6 மணி முதல் இரவு 7 மணிக்குள் கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கரத உலா நடைபெறுகிறது.
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கத்தேர் இழுப்பது வழக்கம்.

இந்நிலையில் தங்கத்தேர் இழுப்பது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தமிழக அரசு அறிவுறுத்தலின்படி, திருச்செந்தூர் முருகன் கோவிலில் சில தினங்களுக்கு முன்பு தங்கத்தேர் இழுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதற்காக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருக்கும் தங்கத்தேரை சுத்தப்படுத்தி மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, தங்கத்தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து மாலை 6 மணி முதல் இரவு 7 மணிக்குள் கோவில் வெளிப்பிரகாரத்தில் தங்கரத உலா நடைபெறுகிறது.

Similar News