சேலம் ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனி ஆண்டவர் ஆசிரமத்தில் இன்று மாலை 4 மணிக்கு சூரசம்ஹார லீலை, நவவீரர் விஜயம், வீரபாகு தூது, சண்முகநாதர் புறப்பாடு மற்றும் சூரசம்ஹாரம் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக, இன்று (செவ்வாய்க்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது. காலை 6 மணிக்கு சுப்ரபாதம், கோமாதாபூஜையுடன் நடைதிறப்பு நடக்கிறது. 9 மணிக்கு கந்த சஷ்டி, சத்ரு சம்ஹார ஹோமம், 36 தடவை சஷ்டி பாராயணம், 108 வலம்புரி சங்காபிஷேகம், கலசாபிஷேகம், லட்சார்ச்சனை நிறைவு பெறும். மதியம் 12 மணிக்கு காவடி பழனி ஆண்டவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு, தீபாராதனை நடக்கிறது.
மாலை 4 மணிக்கு சூரசம்ஹார லீலை, நவவீரர் விஜயம், வீரபாகு தூது, சண்முகநாதர் புறப்பாடு மற்றும் சூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து வெள்ளி மயில் புறப்பாடும், இரவு 7 மணிக்கு மகாஅபிஷேகம், செந்தூர்வேலன் அலங்காரம், 108 தங்க மலர்களால் அர்ச்சனை, மகா தீபாராதனை, திருப்புகழ் பஜனை நடைபெற உள்ளது.
நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு சுப்ரபாதம், கோமாதா பூஜையுடன், நடைதிறக்கப்படும். காலை 11 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை வருதல், 12 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் தொடர்ந்து தீபாராதனை, அன்னதானம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் எஸ்.சோமசுந்தரம், எஸ்.செல்வி ஆகியோர் செய்துள்ளனர்.