ஆன்மிகம்
அருணாச்சலசாமி

மங்காவிளை அருணாச்சலசாமி கோவில் கும்பாபிஷேகம் 10-ந்தேதி நடக்கிறது

Published On 2021-11-08 06:26 GMT   |   Update On 2021-11-08 06:27 GMT
ஈத்தாமொழி அருகே மங்காவிளை அருணாச்சலசாமி கோவில் கும்பாபிஷேகம் 10-ந்தேதி (புதன்கிழமை) 9.30 மணிக்கு நடைபெறுகிறது.அதைத்தொடர்ந்து தீபாராதனையும், அன்னதானமும் நடக்கிறது.
ஈத்தாமொழி அருகே மங்காவிளை அருணாச்சலசாமி கோவில் கும்பாபிஷேகம் 10-ந்தேதி (புதன்கிழமை) முன்னாள் எம்.பி. எம்.சி.பாலன் முன்னிலையில் நடக்கிறது.

அன்று அதிகாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், கலச பூஜை, ருத்ரஹோமம் தீபாராதனையும், காலை 9.15 மணிக்கு கடம் யாகசாலையில் இருந்து புறப்பாடும், 9.30 மணிக்கு அருணாச்சலேசுவரர் சாமிக்கு கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து தீபாராதனையும், அன்னதானமும் நடக்கிறது. 11-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு பூஜையும் அன்னதானமும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை அருணாச்சலசாமி கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பேராசிரியர் அய்யப்பன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News