ஆன்மிகம்
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்

காணிப்பாக்கம் விநாயகர் கோவிலுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்ப்பணம்

Published On 2021-09-20 09:27 IST   |   Update On 2021-09-20 09:27:00 IST
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக மங்கல சீர் வரிசை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக பட்டு வஸ்திரங்கள், மங்கல சீர் வரிசை பொருட்கள் ஆகியவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பட்டு வஸ்திரம் மற்றும் சீர்வரிசை பொருட்களை திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டியும், அவரின் மனைவியும் சமர்ப்பித்தனர்.

முன்னதாக காணிப்பாக்கம் விநாயகர் கோவிலுக்கு வந்த அவர்களை, ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி நாராயணசாமி, பூதலப்பட்டு தொகுதி எம்.எஸ். பாபு எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்றனர். கோவில் அர்ச்சகர்கள், செயல் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டிக்கு பாரம்பரிய சம்பிரதாயத்தின் படி பரிவட்டம் கட்டி, பட்டு வஸ்திரங்கள் மற்றும் மங்கல பொருட்களை தலையில் வைத்தனர். அவரும், மனைவியும் மற்ற அதிகாரிகளும் ஊர்வலமாக வந்து விநாயகரிடம் சமர்ப்பணம் செய்தனர்.

Similar News