ஆன்மிகம்
மூடிய கோவில் வெளியில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்த காட்சி

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை

Published On 2021-09-03 14:22 IST   |   Update On 2021-09-03 14:22:00 IST
கொரோனாவை காரணம் காட்டி கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அரசு தடை விதித்துள்ளது.
மதுரை இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனாவை காரணம் காட்டி கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்கள் பக்தர்கள் அனுமதிக்கு அரசு தடை செய்துள்ளது. இது ஏற்புடையதல்ல. இந்து கோவில்கள் மற்ற வழிபாட்டு தலங்கள் போல் ஒரு சாதாரண வழிபாட்டுதலமல்ல. இந்து கோவில்களில் திருமேனிகள் உள்ளது. தினமும் 6 கால பூஜைகள், விஷேச பூஜைகள் என ஆகம விதிகள்படி நடந்து வருகிறது.

அரசு இதனை உணர வேண்டும். எனவே இந்து கோவில்களில் தினமும் பக்தர்களுக்கு அனுமதிக்க வேண்டி தமிழக முதல்-அமைச்சருக்கு அஞ்சல் அட்டை கோரிக்கை மூலம் வேண்டுகோள் விடுக்கும் வகையில் பக்தர்களிடம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். பக்தர்கள் பூர்த்தி செய்து தரும் அஞ்சல் அட்டைகளை அரசுக்கு அனுப்ப முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News