ஆன்மிகம்
கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவில்

கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை

Published On 2021-09-03 13:13 IST   |   Update On 2021-09-03 14:25:00 IST
கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கஞ்சமலை சித்தேஸ்வர சுவாமி கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் கொரோனா தடுப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டு அரசு அறிவிப்பின்படி இன்று (3-ந்தேதி) முதல் வருகிற 5-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது 6-ந் தேதி அமாவாசை உற்சவத்தில் அதிகப்படியான பக்தர்கள் கோவிலில் கூடுவார்கள் என்பதால் 6-ந் தேதியும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்படுகிறது.

எனவே பக்தர்கள் இன்று முதல் 6-ந் தேதி வரை பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தவும், குளிக்கவோ, பொங்கல், வைக்கவும், வழிபாடு செய்யவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News