ஆன்மிகம்
தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் வெளியே நின்று பக்தர்கள் வழிபாடு

தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் வெளியே நின்று பக்தர்கள் வழிபாடு

Published On 2021-07-10 13:38 IST   |   Update On 2021-07-10 13:38:00 IST
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஆனி மாத அமாவாசையையொட்டி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
கொரோனா 2-வது அலை காரணமாக தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இதையடுத்து தொற்று பரவல் குறைந்து வந்ததை கருத்தில் கொண்டு படிபடியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி சேலம் மாவட்டத்தில் கடந்த 5-ந் தேதி கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் ஒவ்வொரு அமாவாசையின் போதும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஆனி மாத அமாவாசையையொட்டி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள், நுழைவு வாயிலில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து திரும்பி சென்றனர்.

Similar News