ஆன்மிகம்
அரியமங்கலம் ஜெய் அகோர காளி கோவிலில் கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்து பூஜை செய்த அகோரிகள்

அரியமங்கலம் ஜெய் அகோர காளி கோவிலில் கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்து பூஜை செய்த அகோரிகள்

Published On 2021-05-27 11:58 IST   |   Update On 2021-05-27 11:58:00 IST
சந்திரகிரகணம் ஆரம்பித்த நேரத்தில் ஓம் க்ரீம் என்று வரையப்பட்ட கோலத்தில் அகோரிகள் உடல் முழுக்க திருநீறு பூசிக்கொண்டு தலையில் அக்னிசட்டியுடன் அமர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு அகோரி மணிகண்டன் தலைமையில் அகோரிகள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

சந்திரகிரகணம் ஆரம்பித்த நேரத்தில் ஓம் க்ரீம் என்று வரையப்பட்ட கோலத்தில் அகோரிகள் உடல் முழுக்க திருநீறு பூசிக்கொண்டு தலையில் அக்னிசட்டியுடன் அமர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

அப்போது கழுத்தில் கபால மாலை(மண்டை ஓடு) அணிந்து கொண்டு மந்திரங்களை ஜெபித்தனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் பக்தர்கள் இல்லாமல் பூஜைகள் நடைபெற்றது. அகோரி மணிகண்டன் கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்து பூஜை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News