ஆன்மிகம்
ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி திருப்பதி கோவிலில் இன்று சுத்தப்படுத்தும் பணி நடந்த காட்சி.

திருப்பதியில் ஆழ்வார் திருமஞ்சனம்

Published On 2021-04-06 14:37 IST   |   Update On 2021-04-06 14:37:00 IST
வரும் ஏப்ரல் 13-ந் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி கொண்டாடப்பட உள்ளது. எனவே அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமையான இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது.
திருப்பதி :

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆண்டுக்கு 4 முறை ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.

வைகுண்ட ஏகாதசி, யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்கள் நடைபெறுவதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் தேவஸ்தானம் இதை செய்து வருகிறது.

அதன்படி வரும் ஏப்ரல் 13-ந் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி கொண்டாடப்பட உள்ளது. எனவே அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமையான இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்வது நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஏழுமலையான் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. 11 மணி வரை இந்த பணிகள் நடந்தது.

இதையடுத்து வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டு 12 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Similar News