ராசிபலன்

இன்றைய ராசிபலன் 12.2.2026: இந்த ராசிக்காரர்களுக்கு நிதி நிலை உயரும்

Published On 2026-02-12 05:53 IST   |   Update On 2026-02-12 05:53:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

எதையும் யோசித்துச் செய்யவேண்டிய நாள். திட்டமிட்ட காரியம் திசைமாறி செல்லும். வரவைவிட செலவு அதிகரிக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்

இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். எதையும் போராடி முடிக்க வேண்டிய நிலை ஏற்படும். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு.

மிதுனம்

தடைகள் அகலும் நாள். தன்னம்பிக்கை கூடும். பக்கத்தில் உள்ளவர்களால் ஏற்பட்ட சிக்கல் அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.

கடகம்

நிதி நிலை உயரும் நாள். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும். தொழில் வளர்ச்சி உண்டு. பொதுவாழ்வில் புகழ் சேர்ப்பீர்கள்.

சிம்மம்

விரோதிகள் விலகும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

கன்னி

தள்ளிச்சென்ற வாய்ப்புகள் தானாக முடிவடையும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோக முயற்சி கைகூடும்.

துலாம்

எடுத்த முயற்சி எளிதில் வெற்றி தரும் நாள். பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும். வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.

விருச்சிகம்

எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமானம் அதிகரிக்கும். செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும்.

தனுசு

உறவினர் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழும் நாள். உடன்பிறப்புகளின் இல்லத்தில் சுபகாரியம் நடைபெறும். வாழ்க்கைத்துணை வழியே நல்ல தகவல் வரும்.

மகரம்

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உறவினர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். பக்கத்து வீட்டாரால் ஏற்பட்ட பகை மாறும்.

கும்பம்

அதிர்ஷ்டமான நாள். அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும். முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். சொத்துகளால் லாபம் உண்டு.

மீனம்

முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும்.

Tags:    

Similar News