ஆன்மிகம்
நடராஜர் அபிஷேகம்

ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு அபிஷேகங்கள்

Published On 2020-06-03 06:45 GMT   |   Update On 2020-06-03 06:45 GMT
நமக்கு ஓர் ஆண்டு, தேவர்களுக்கு ஒரு நாள். ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும். அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
நமக்கு ஓர் ஆண்டு, தேவர்களுக்கு ஒரு நாள். ஓர் ஆண்டில் நடராஜருக்கு ஆறு நாட்கள் அபிஷேகம் நடத்தப்படும்.

1. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில், மாலையில் அபிஷேகம்

2. ஆனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம்

3. ஆவணி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில் மாலையில் அபிஷேகம்.

4. புராட்டாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தசியில் கனக சபையில், மாலையில் அபிஷேகம்.

5. மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் இராச சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் உதயத்திற்கு முன் 4 மணிக்கு அபிஷேகம் 6. மாசி மாதத்தில் பூர்வ பட்ச சதுர்த்தியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம். அபிஷேகங்கள் நடைபெறும் போது நடராஜரை கண்டு வணங்கி வழிபடுவது மிகவும் நல்லது. விசேஷமானது.
Tags:    

Similar News