ஆன்மிகம்
31 நாட்களில் அத்திவரதரை 48 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
காஞ்சீபுரத்தில் அத்திவரதரை சயன கோலத்தில் இதுவரை 48 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இன்று முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் அத்திவரதர் சயன(படுத்த நிலையில்) கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக சென்னை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் நாளுக்கு நாள் குவிந்த வண்ணம் உள்ளனர். பக்தர்கள் வெள்ளத்தில் காஞ்சீபுரம் திக்குமுக்காடி வருகிறது.
31-வது நாளான நேற்று அத்திவரதர், மஞ்சள் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுமார் 3 கி.மீ. தூரம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
அத்திவரதர், பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சி அளிப்பது நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று (வியாழக்கிழமை) முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
இதற்காக நேற்று மதியம் 12 மணிக்கு பிறகு இலவச தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே இலவச தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மட்டுமே அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் மதியம் 12 மணிக்கு பிறகு இலவச தரிசனத்தில் செல்ல வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதேபோல் முக்கிய பிரமுகர்களுக்கான வரிசையிலும் மதியம் 3 மணிக்கு பிறகு யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே வந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
சயன கோலத்தில் இருக்கும் அத்திவரதரை நின்ற கோலத்தில் மாற்றுவதற்கு வசதியாக நேற்று மாலை 5 மணிக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தரிசனம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பக்தர்கள் 6 மணிநேரம் வரை வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்தனர். கடந்த மாதம் 1-ந்தேதி முதல் நேற்று வரையிலான 31 நாட்களில் சயன கோலத்தில் இருந்த அத்திவரதரை மொத்தம் 48 லட்சத்து 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால் இதுவரை தரிசனம் செய்யாத பக்தர்கள் மட்டுமின்றி, ஏற்கனவே சயன கோலத்தில் தரிசனம் செய்த பக்தர்களும் நின்ற கோலத்தில் அத்திவரதரை காண்பதற்காக வருவார்கள். இதனால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அத்திவரதரை தரிசனம் செய்தார். அவர் அத்திவரதருக்கு மஞ்சள் பட்டாடை, பாதாம் பருப்பு, உலர்ந்த திராட்சை, ரோஜா, துளசி மாலை போன்றவற்றை தட்டில் வைத்து வழங்கினார்.
முன்னதாக காஞ்சீபுரம் வந்த ஓ.பன்னீர்செல்வத்தை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா பொன்னாடை அணிவித்து வரவேற்றார். காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், வடகால் சவரிங்கம் உள்பட பலர் வரவேற்றனர்.
நேற்று அத்திவரதரை புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி தரிசனம் செய்தார். பின்னர் அவர் மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பல்லவர் கால புராதன சின்னங்களை சுற்றி பார்த்து மகிழ்ந்தார். பல்லவர்களின் வரலாறுகள் குறித்து தொல்லியல் துறையினர் அவருக்கு எடுத்து கூறி விளக்கினர்.
தலசயன பெருமாள் கோவிலுக்கு சென்ற கிரண்பெடி அங்கு சயன நிலையில் காட்சி தரும் தலசயன பெருமாளை வணங்கினார்.