ஆன்மிகம்

செல்வ வளம் தரும் கோ பூஜை

Published On 2019-05-19 09:01 GMT   |   Update On 2019-05-19 09:01 GMT
பசு நுழைந்த வீட்டில் தீய சக்திகள் அண்டாது. ‘கோ’ பூஜை செய்வதன் மூலம் ஆபத்துக்கள் அகலும். பாவம் தீரும். செல்வம் செழிக்கும்.
விலங்குகளுக்கு சக்தி அதிகம். கலங்கும் உள்ளத்தைக் காப்பதற்கு விலங்குகள் பெரிதும் உதவுகின்றன. பசு ஒரு சக்தி வாய்ந்த விலங்கு. வீடுகளில் பசுக்களை வளர்ப்பது நல்லது. அவற்றுக்கு ‘கோ’ பூஜை செய்வதன் மூலம் ஆபத்துக்கள் அகலும். பாவம் தீரும். செல்வம் செழிக்கும்.

கிரகப் பிரவேசத்தில் கோ பூஜை செய்வார்கள். மணிவிழா நடைபெறும் போதும், கணபதி ஹோமம் செய்யும் பொழுதும் கோ பூஜை செய்யப்படும்.

பசு நுழைந்த வீட்டில் தீய சக்திகள் அண்டாது. முன்பு அரசர்களின் ஊர்வலங்களில், பசுதான் முதலில் செல்லும். அதிகாலையில் பசுவை தரிசனம் செய்தால், எல்லா தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பசு வழங்கும் ஐந்து பொருட்கள்:- பால், தயிர், வெண்ணெய், கோமியம், சாணம் ஆகும். இந்த ஐந்தும் கலந்த கலவையே சக்தி பெற்ற ‘பஞ்சகவ்யம்’ என்று அழைக்கப் படுகிறது. சிரவண சடங்குகளில் பஞ்சகவ்யம் கொடுக்கப்படும். வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த இடத்தில் பஞ்சகவ்யம் தெளிக்கப்படும்.

கர்ப்பம் தரித்த பெண்கள் 3-ம் மாதத்தில் இருந்து பஞ்சகவ்யம் சாப்பிடுவார்கள். புதிதாக வாங்கும் ஆடைகளை பசுவின் முதுகில் வைத்து வழிபட்டு விட்டு, பிறகு அணிந்து கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். நோயுற்ற குழந்தைகளின் முகத்திற்கு எதிரே, பசுவின் வாலை 3 முறை சுற்றிக் காட்டினால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. பசு பால் வழங்குவதில் இருந்து 11-வது நாள் வரும் பாலை, அனைவருக்கும் இலவசமாக வழங்கினால், அந்தக் குடும்பத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
Tags:    

Similar News