ஆன்மிகம்

பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர்

Published On 2019-04-22 09:05 GMT   |   Update On 2019-04-22 09:05 GMT
விநாயகருக்கு பல ஆயிரம் ஆலயங்கள் இருந்தாலும், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குகிறார்.
விநாயகருக்கு பல ஆயிரம் ஆலயங்கள் இருந்தாலும், புதுச்சேரியில் உள்ள மணக்குள விநாயகர் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குகிறார். இது 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம்.

இந்தக் கோவிலுக்கு அருகில் இருந்த மணலால் ஆன குளத்தில் வற்றாத நீரூற்று இருந்ததாகவும், அந்த சுவையான நீரால் விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உள்ளன. அதனால்தான் இவருக்கு ‘மணக்குள விநாயகர்’ என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். இவருக்கு ‘வெள்ளைக்கார பிள்ளையார்’ என்ற பெயரும் உண்டு.

வெள்ளைக்காரர்களால் கடலில் வீசப்பட்ட இந்த ஆலயத்தின் விநாயகர் சிலை, மீண்டும் கரைக்கு வந்து சேர்ந்ததால் இந்தப் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. கிழக்குப் பார்த்த சன்னிதியில் கடற்கரையோரம் உள்ள சிறிய ஆலயத்தில், நான்கு கரங்களுடன் இந்த விநாயகர் அருள்புரிகிறார். ஆலயத்தின் உட்புறச் சுவர்களில், விநாயகரின் புராணங்கள் ஓவியமாக தீட்டப்பட்டுள்ளன. இவரை வழிபட்டால் காரியத்தடை விலகும். அன்பும், அமைதியும் பெருகும்.
Tags:    

Similar News