ஆன்மிகம்
கும்பாபிஷேகம் நடைபெற உள்ள பத்ரகாளியம்மன் கோவிலை படத்தில் காணலாம்.

தஞ்சை பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17-ந்தேதி நடக்கிறது

Published On 2019-02-15 06:06 GMT   |   Update On 2019-02-15 06:06 GMT
தஞ்சை மேலவஸ்தாசாவடியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
தஞ்சையை அடுத்த மேலவஸ்தாசாவடியில் உள்ள விநாயகர், முத்துமாரியம்மன், முத்து முனியாண்டவர் ஆகிய கோவில்கள் புதுப்பிக்கப்பட்டும், பத்ரகாளியம்மனுக்கு புதிய கோவில் கட்டப்பட்டும் உள்ளது. இந்த கோவில்களில் 17-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடக்கிறது.

காலை 10 மணிக்கு தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரியத்தில் உள்ள பாலச்சந்திர விநாயகர் கோவிலில் இருந்து புலியாட்டம், செண்டைமேளம், தப்பாட்டம், சிலம்பாட்டம், யானை, குதிரை, ஆடு, மாடு ஆகிய ஊர்வலத்துடன் புனித நீர் எடுத்து வரப்பட்டு மேலவஸ்தாசாவடியில் அமைந்துள்ள பத்ர காளியம்மன் கோவிலை வந்தடைகிறது.

நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.

17-ந் தேதி(ஞாயிற்றுக் கிழமை) காலை 9.45 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. அதனை தொடர்ந்து 10.15 மணிக்கு விநாயகருக்கும், 10.40 மணிக்கு முத்து முனியாண்டவருக்கும், 11 மணிக்கு முத்து மாரியம்மனுக்கும், 11.15 மணிக்கு பத்ரகாளியம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை மேலவஸ்தாசாவடி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News