ஆன்மிகம்
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றம்

Published On 2019-02-15 08:17 IST   |   Update On 2019-02-15 08:17:00 IST
ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் கடைசி தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தரிசனம் நடந்தது. பின்னர் கொடிப்பட்டம் வீதி உலா வந்தது. காலை 8.50 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

விழாவில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி, அ.தி.மு.க. நகர செயலாளர் செந்தில் ராஜ்குமார், வ.உ.சி. இளைஞர் பேரவை தலைவர் கோமதிநாயகம் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். 5-ம் நாளான 18-ந்தேதி (திங்கட்கிழமை) இரவில் கருடசேவை நடக்கிறது. 9-ம் நாளான 22-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

10-ம் நாளான 23-ந்தேதி (சனிக்கிழமை) இரவில் பெருமாள் தெப்ப உற்சவம் நடக்கிறது. 11-ம் நாளான 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவில் நம்மாழ்வார், ஆச்சாரியர்கள் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 25-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் தீர்த்தவாரி நடக்கிறது.
Tags:    

Similar News