ஆன்மிகம்

காசிவிசுவநாதர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா

Published On 2018-12-11 04:10 GMT   |   Update On 2018-12-11 04:10 GMT
வேடசந்தூர் கடைவீதியில் பழமை வாய்ந்த காசிவிசுவநாதர்-விசாலாட்சி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேக விழா நடந்தது.
வேடசந்தூர் கடைவீதியில் பழமை வாய்ந்த காசிவிசுவநாதர்-விசாலாட்சி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேக விழா நடந்தது. மேலும் மூலவர் காசிவிசுவநாதருக்கு பால், தயிர், இளநீர், திருமஞ்சன பொடி உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மூலவருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் கோவிலில் உள்ள விநாயகர், நவக்கிரகம், கால பைரவர், சுப்பிரமணியர், விசாலாட்சி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து சிவக்குமார் சிவாச்சாரியார் தலைமையில் 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மறுவாழ்வு பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News