ஆன்மிகம்
ஆண்டாள், ரெங்கமன்னார் உள்ளிட்ட சாமி விக்ரகங்களுக்கு போர்வை சாற்றப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.

ஆண்டாள் கோவிலில் போர்வை சாற்றும் வைபவம்

Published On 2018-11-21 03:02 GMT   |   Update On 2018-11-21 03:02 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று நடந்த போர்வை சாற்றும் வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகவும், பல்வேறு சிறப்புகளை கொண்ட தலமாகவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் விளங்குகிறது. அங்கு கார்த்திகை மாதம் சுக்ல பட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு முன்அறிவிக்கும் வண்ணமும் ஆண்டாள் கோவிலில் தெய்வங்களுக்கு 108 போர்வைகள் சாற்றப்படும் வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இதே போல் இந்த ஆண்டுக்கான 108 போர்வை சாற்றும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. இந்த வைபவத்தின் போது நேற்று ஒரு நாள் மட்டுமே சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபத்தில் கருடாழ்வார் எழுந்தருளினார்.

அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, ஆழ்வார்கள் என தெய்வங்களின் விக்ரகங்களுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. அதிகாலையில் புராணம் வாசிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News