ஆன்மிகம்
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றபோது எடுத்த படம்.

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2018-11-16 10:22 IST   |   Update On 2018-11-16 10:22:00 IST
பண்ருட்டி திருவதிகையில் புகழ் பெற்ற திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி திருவதிகையில் புகழ் பெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி சிறப்பாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

விழாவில் வள்ளி, தெய்வானை சமேத முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் திருமண மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சிறப்பு யாகம் நடைபெற்றது. இதையடுத்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. பின்னர் முருகன், வள்ளி தெய்வானையுடன் சாமி வீதிஉலா நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் நகரசபை தலைவர் பன்னீர்செல்வம், செயல்அலுவலர் நாகராஜன், விழா உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News