ஆன்மிகம்

மயிலம் முருகனுக்கு விருந்தோம்பல்

Published On 2018-06-10 06:02 GMT   |   Update On 2018-06-10 06:02 GMT
புகழ்பெற்ற ஆலயமாகத் திகழும் மயிலம் முருகன் திருக்கோவிலில் மாசி மகத்தன்று முதல் நாள் மாலை வரும் மயிலம் முருகனை சாரத்தில் வரவேற்று, மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஆலயமாகத் திகழ்வது மயிலம் முருகன் திருக்கோவில். மயிலம் முருகன் மாசி மகத்திற்குப் புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரைக்கு வந்து, தீர்த்தவாரி முடித்து பக்தர்களுக்கு அருள் வழங்குவார். இதன்பின்பு மயிலம் திரும்புவது நூறு ஆண்டுகளைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வகையில் புதுச்சேரிக்குள் மாசி மகத்தன்று முதல் நாள் மாலை வரும் மயிலம் முருகனை சாரத்தில் வரவேற்று, மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது. பிறகு அன்றிரவு முருகன், சாரம் முழுவதும் வீதியுலா வருவார். இவருக்கு ஒவ்வொரு வீட்டிலும் அர்ச்சனை செய்து மகிழ்வார்கள்.

மாசி மகத்தில் பங்கேற்று விட்டு மூன்று நாட்கள் மிஷன் வீதியில் உள்ள மயிலம் பொம்மபுர ஆதீன மடத்தில் தங்கி, மீண்டும் சாரம் முருகன் ஆலயத்தில் அதிகாலை 5 மணிக்கு வீதியுலா வந்து சாரம் முருகன் ஆலயத்தில் காலை 8 மணிக்கு மகாஅபிஷேகம் நடைபெறும். இதன்பின்பு முற்பகல் 11 மணிக்கு மயிலம் முருகனுக்கு சாரம் முருகன் பிரியா விடையளிப்பார். இவரின் வருகையில் புதுச்சேரி மட்டுமின்றி, தமிழகத்து மக்களும் கொண்டாடி மகிழ்வார்கள்.

புதுச்சேரி மாசி மகத்தன்று தீவனூர் பிள்ளையார், செஞ்சி ரங்கநாதர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேலான ஆலயங்களின் தெய்வங்கள் அருள்காட்சி வழங்குவது கண்கொள்ளாக் காட்சியாக அமைந்துள்ளது.
Tags:    

Similar News