ஆன்மிகம்

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந் தேதி நடக்கிறது

Published On 2018-05-22 04:54 GMT   |   Update On 2018-05-22 04:54 GMT
தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் பழமையும், பெருமையும் வாய்ந்தது உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 28-ந் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் பழமையும், பெருமையும் வாய்ந்தது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் ஆகும். இங்கு சுவாமி சுயம்புவாக தோன்றி அருள் புரிந்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து திரளான பக்தர்கள் இங்கு வருவார்கள். இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழா வருகிற 28-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

விழாவையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5 மணிக்கு அபிஷேகம், சிறப்பு உதய மார்த்தாண்ட பூஜை, காலை 11 மணிக்கு உச்சிகால அபிஷேகம், உச்சிகால பூஜை, மாலையில் மங்கள இசை, இரவில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை கச்சேரி ஆகியன நடக்கிறது. நள்ளிரவு 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா வந்து மகர மீனுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.

விழாவை முன்னிட்டு நெல்லை, நாகர்கோவில், திசையன்விளையில் இருந்து உவரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்துள்ளார். 
Tags:    

Similar News