ஆன்மிகம்

சேஷ வாகனத்தில் லட்சுமி ஹயக்ரீவர் உலா

Published On 2016-09-08 08:37 IST   |   Update On 2016-09-08 08:37:00 IST
முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நேற்று சேஷ வாகனத்தில் லட்சுமி ஹயக்ரீவர் வீதி உலா நடைபெற்றது.
புதுவை முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவில் கடந்த 4-ந் தேதி பிரமோற்சவ விழா தொடங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் சர்வலோக யோக சேமத்திற்காக தினமும் இருவேளையும் ஹோமம் நடைபெற்று வருகிறது. வருகிற 13-ந் தேதி வரை பிரமோற்சவ விழா நடக்கிறது.

நாள்தோறும் காலையில் சாமிக்கு திருமஞ்சனமும், வேதபாராயண திவ்ய பிரபந்த சேவை, சாற்று முறையும், இரவில் வேதபாராயண திவ்ய பிரபந்த சேவை, பெருமாள் வாகனங்களில் வீதி உலாவும் நடக்கிறது. நேற்று சேஷ வாகனத்தில் லட்சுமி ஹயக்ரீவர் வீதி உலா நடைபெற்றது.

இன்று (வியாழக்கிழமை) இரவு தங்க கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) ஹனுமந்த சேவையும், 10-ந் தேதி திருக்கல்யாணமும், யானை வாகனத்தில் வீதி உலாவும், 11-ந் தேதி மங்களகிரி-கோரதம் சூர்ணோத்சவம் வாகன வீதி உலாவும், 12-ந் தேதி புன்னை மர வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது. 13-ந் தேதி காலை 7.30 மணிக்கு ஹயக்ரீவர் ஜெயந்தி திருத்தேர் வீதி உலா நடைபெறுகிறது.

Similar News