ஆன்மிகம்

அனைத்துவித மங்களங்களும் அருளும் ஸர்வ மங்களா தேவி மந்திரம்

Published On 2018-08-04 10:53 IST   |   Update On 2018-08-04 10:53:00 IST
ஸர்வ மங்களா தேவிக்கு உகந்த மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்துவித மங்களங்களும் வந்து சேரும்.
இந்த தேவி பொன்னிற மேனியில் நவரத்தினங்களும் இழைக்கப்பட்ட வைடூரிய மகுடம் துலங்கப் பொலிவாக காட்சி தருகிறாள். இந்த நித்யா தேவியின் கடைக்கண் பார்வை அன்பரைக் காக்கின்றது. தன் நான்கு கரங்களிலும் மாதுளம் பழம், தங்கப் பாத்திரம் ஏந்தி அபய, வரத முத்திரை தரித்து ள்ளாள். சிவப்புப் பட்டுடுத்தி ஸர்வாலங்கார பூஷிதையாய் தோற்றம் அளிக்கிறாள்.

மந்திரம்:

ஓம் ஸர்வமங்களாயை வித்மஹே
சந்த்ராத்மிகாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

வழிபட வேண்டிய திதிகள்: சுக்ல பட்ச திரயோதசி, கிருஷ்ண பட்ச திருதியை.

பலன்கள்: பயணங்களில் விபத்து ஏதுமின்றி பாதுகாப்பு கிட்டும். அனைத்துவித மங்களங்களும் வந்து சேரும்.
Tags:    

Similar News