ஆன்மிகம்

நவராத்திரிக்கு சொல்ல வேண்டிய லட்சுமி பாடல்

Published On 2017-09-21 10:39 IST   |   Update On 2017-09-21 10:39:00 IST
இன்று தொடங்கும் நவராத்திரி அன்று வீட்டில் கொலு வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை பாடி பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
இன்று தொடங்கும் நவராத்திரி அன்று வீட்டில் கொலு வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை பாடி பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.

லட்சுமி பாடல் :

செல்வத் திருமகளே! மோகனவல்லியே!
எல்லாரும் கொண்டாடும் வேதவல்லியே!
எண் கரங்களில் சங்கு சக்கரம்
வில்லும் அம்பும் தாமரை
மின்னும் கரங்களில் நிறைகுடம்
தளிர்த் தாம்பூலம் அணி சியாமளையே!
வரத முத்திரை காட்டியே
பொருள் வழங்கும் அன்னையே!
சிரத்தினில் மணி மகுடம்
தாங்கிடும் சிந்தாமணியே!
பல வரம் வழங்கிடும் ரமாமணியே!
வரதராஜ சிகாமணியே!
தாயே! தனலட்சுமியே!
சகல வளமும் தந்திடுவாய்

Similar News