ஆன்மிகம்

நவராத்திரிக்கு சொல்ல வேண்டிய அம்பாள் பாடல்

Published On 2017-09-20 09:21 GMT   |   Update On 2017-09-20 09:21 GMT
நவராத்திரி அன்று வீட்டில் கொலு வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பாடலை பாடி பூஜை செய்து வழிபாடு செய்ய வேண்டும்.
காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி
காசி விசாலாட்சி கருணாம்பிகையே!
தருணம் இதுவே தயை புரிவாயம்மா!
பொன் பொருள் எல்லாம்
வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!
ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்
என் அன்னை நீயே அம்மா!
மங்களம் வழங்கிடும் மகாசக்தியே!
மங்கலத் தாயே நீ வருவாயே!
என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே!
எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே!
பயிர்களில் உள்ள பசுமையில்
கண்டேன் பரமேஸ்வரி உனையே!
சரண் உனை அடைந்தேன்
சங்கரி தாயே, சக்தி தேவி நீயே!
அரண் எனக் காப்பாய்
அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!
Tags:    

Similar News