ஆன்மிகம்

மகாபுஷ்கரம்: காவிரித்தாயை வணங்கும் துதி

Published On 2017-09-11 05:39 GMT   |   Update On 2017-09-11 05:39 GMT
ஏழு புண்ணிய நதிகளுள் உயர்ந்த மகாநதியாக விளங்கும் காவிரித்தாயை புஷ்கர் நீராடலின் போது காவிரிக்கரையில் நின்று கைகூப்பியபடி மூன்று முறை படிக்க வேண்டிய துதி.
ஏழு புண்ணிய நதிகளுள் உயர்ந்த மகாநதியாக விளங்கும் காவிரித்தாயை நினைத்து வடநூலாரும் தமிழ்ப்புலவர்களும் துதி பாடி உள்ளனர். காவிரி புஷ்கர் நீராடலின் போது காவிரிக்கரையில் நின்று கைகூப்பியபடி மூன்று முறை படிக்க வேண்டிய துதி.

காற்றாகிப் பெருகி வருபவளே!
வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய
பேறுகளைத் தன்னிடம் கொண்டிருப்பவளே!
விரதங்களை நிறைவேற்றிப் பலன்களைத்
தருகின்ற ஒப்பற்ற தாயே! அனைவரது
மனங்களையும் கொள்ளை கொள்பவளே!
உன்னிடம் புனித நீராடல் செய்து
வருபவர்களது பாவங்களை அழிப்பவளே!
புண்ணியங்களைக் கொடுத்தருளும் காவிரித்தாயே!
நாங்கள் அறியாமல் செய்துவிட்ட
பாவங்களைப் போக்குவாயாக!
காவிரி மகராஜனின் அன்பு மகளே!
கடல் அரசனுடைய மனம் கவர்ந்த பட்டத்து அரசியே!
எல்லா புண்ணிய தீர்த்தங்களுடைய உருவமானவளே!
காவிரி சக்தியே எங்களுக்குச்
சிந்தனை செய்கின்ற திறனையும்,
அறிவையும் அனைத்துச் செல்வங்களையும்,
நற்பேறுகளையும் தந்து காத்திட வேண்டுகிறோம்.
கருணைக் கடலாக விளங்குபவளே!
நதிகளில் உயர்ந்தவளே!
எங்களைச் சம்சாரம் என்கின்ற கொடுமையான
கடலிலிருந்து கரையேற்றி விட வேண்டுகிறோம்.
Tags:    

Similar News