ஆன்மிகம்

விநாயகர் வழிபாட்டு பாடல்கள்

Published On 2017-08-07 09:40 GMT   |   Update On 2017-08-07 09:40 GMT
தினமும் காலையில் பூஜையின் போதோ வழிபாட்டின் போதோ கீழ்கண்ட விநாயகர் துதி பாடல்கள் ஏதேனும் ஒன்றை பாடி வழி பட நன்மை பயக்கும்.
வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான்    
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது -  பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

-  ஒளவையார்.

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் - கோலம்செய்
துங்கக் கரி முகத்துத் தூமணியே  நீ எனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா.

- ஒளவையார்.

ஒருகோட்டன் இருசெவியன் மும்மதத்தன்
         நால்வாய் ஐங்கரத்தன் ஆறு
தரு கோட்டு அம் பிறை இதழித் தாழ் சடையன்
         தரும் ஒரு வாரணத்தின் தாள்கள்
உருகோட்டு அன்பொடும் வணங்கி ஓவாதே
         இரவு பகல் உணர்வோர் சிந்தைத்
திருகோட்டு அயன் திருமால் செல்வமும்
         ஒன்றோ என்னச் செய்யும் தேவே

- அருணந்திசிவம்.
Tags:    

Similar News