ஆன்மிகம்

மனதுக்கு நிம்மதியும், சகல செல்வங்களும் கிடைக்க திருப்புகழ் பாடுங்கள்

Published On 2017-08-05 04:11 GMT   |   Update On 2017-08-05 04:11 GMT
கார்த்திகை விரதம் இருந்தாலும், இருக்கமுடியாவிட்டாலும் கீழ்க்கண்ட இரு திருப்புகழ்ப் பாடல்களை மட்டுமாவது படிக்கலாம் என்றும் சொல்லுகின்றனர்.
கார்த்திகை விரதம் இருந்தாலும், இருக்கமுடியாவிட்டாலும் கீழ்க்கண்ட இரு திருப்புகழ்ப் பாடல்களை மட்டுமாவது படிக்கலாம் என்றும் சொல்லுகின்றனர். இவை மனதுக்கு நிம்மதியையும், சகல செல்வங்களையும் அருளிச் செய்யும் என வாரியார் சுவாமிகள் கூறி இருக்கிறார்.

“அதிருங் கழல்பணிந்து னடியேனுன்
அபயம் புகுவதென்று நிலைகாண
இதயந்தனிலிருந்து க்ருபையாகி
இடர் சங்கைகள் கலங்க அருள்வாயே!
எதிரங்கொருவரின்றி நடமாடும்
இறைவன் தனது பங்கிலுமைபாலா
பதியெங்கிலுமிருந்து விளையாடிப்
பலகுன்றிலும மர்ந்த பெருமானே.”

சரணகமலாலயத்தை அரை நிமிஷ நேரமட்டில்
தவமுறை தியானம் வைக்க அறியாத
சடகசட மூட மட்டி பலவினையிலேசனித்த
தமியன்மிடியால்மயக்கமுறுவேனோ!
கருணைபுரியாதிருப்பதென குறையி வேளை செப்பு
கயிலைமலை நாதர் பெற்ற குமரோனே!
கடகபுய மீதி ரத்ந மணியணிபொன் மாலை செச்சை
கமழுமணமார் கடப்ப மணிவோனே

தருணமிதையாமி குத்தகனமதுறு நீள் சவுக்ய
சகலசெல்வ யோகமிக்க பெருவாழ்வு
தமைமைசிவ ஞானமுத்தி பரகதியு நீ கொடுத்து
தவிபுரிய வேணு நெய்த்த வடிவேலா!

அருணதள பாத பத்ம மதுநிதமுமேது திக்க
அரிய தமிழ்தானளித்த மயில்வீரா
அதிசயம நேகமுற்ற பழநிமலை மீதுதித்த
அழகதிருவேரகத்தின் முருகோனே!
Tags:    

Similar News