ஆன்மிகம்

வாழ்வில் மகிழ்ச்சி பெருக நடராஜர் ஸ்லோகம்

Published On 2017-03-24 08:25 GMT   |   Update On 2017-03-24 08:25 GMT
தினமும் அல்லது சிவனுக்கு உகந்த நாட்களில் இத்துதியை பாராயணம் செய்ய, வலிப்பு முதலான அனைத்து நோய்களும் விலகும்; வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.
நத்ராக்னி ஸந்தக்த மாரம் - பாத
மூலேன சாக்ராந்த துஷ்டாபஸ்மாரம்
கண்டே லஸத்ஸர்பஹாரம் - வேத
ஸாரம் விராகம் ஜடாஜூட பாரம்

- சித்சபேச ஸ்தோத்ரம்.

பொதுப்பொருள் :

நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட தீப்பொறிகளினால் மன்மதனை எரித்து சாம்பலாக்கிய பெருமானே நமஸ்காரம். வலது பாதத்தால் அபஸ்மாரம் (வலிப்பு) என்ற நோயின் தேவதையை, பக்தர்களை துன்புறுத்தாமல் இருப்பதற்காக அழுத்திக்கொண்டு இருப்பவரே, கழுத்தில் பாம்புகளை மாலையாக அணிந்தவரே நடராஜா, நமஸ்காரம். வேதங்களின் சாரமானவரே, விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவரே, ஜடாமுடி தரித்தவரே, நடராஜப் பெருமானே நமஸ்காரம்.

(ஆனித் திருமஞ்சன தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்ய, வலிப்பு முதலான அனைத்து நோய்களும் விலகும்; வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.)

Similar News