ஆன்மிகம்

காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய விநாயகர் ஸ்லோகம்

Published On 2016-07-09 08:16 IST   |   Update On 2016-07-09 08:16:00 IST
காலையில் எழுந்தவுடன் இந்த விநாயகர் ஸ்லோகத்தை சொல்லி வந்தால் அன்றைய தினம் முழுவதும் எந்த செயலை செய்வதாலும் தங்குதடையின்றி நடக்கும்.
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.

Similar News