ஆன்மிகம்

அருள் தரும் தேவி மஹாத்மியம்

Published On 2016-06-27 07:47 IST   |   Update On 2016-06-27 07:47:00 IST
எந்தத் தேவியானவள் எல்லா உயிர்களிலும் சக்தியின் உருவமாக அமைந்திருக்கிறாளோ அவளுக்கு எங்கள் நமஸ்காரம்.
“ யா தேவி சர்வ பூதேஷு சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்மை; நமஸ்தஸ்மை; நமஸ்தஸ்மை நமோ நமஹ!!”
 
என்கிறது தேவி மஹாத்மியம்.
 
இதன் பொருள்:
 
“எந்தத் தேவியானவள் எல்லா உயிர்களிலும் சக்தியின் உருவமாக அமைந்திருக்கிறாளோ அவளுக்கு எங்கள் நமஸ்காரம்,”
 
தேவி மஹாத்மியத்தில் சப்தசதி என்ற பிரிவில் 700 சுலோகங்கள் தேவியின் அழகையும் வீரத்தையும் வருணிக்கின்றன. இப்பராசக்திதான் இச்சா சக்தி, க்ரியாசக்தி, ஞானசக்தி என்று விளங்கி பரமனின் பத்தினியாகவும் விளங்குகிறாள் என்றும் அவளே மலை மகளாகவும், கலைமகளாகவும், அலைமகளாகவும், துர்க்கையாகவும் அவதாரம் எடுக்கிறாள் என்றும் மார்கண்டேய புராணத்தில் வரும் தேவி மஹாத்மியம் கூறுகிறது.

Similar News