ஆன்மிகம்

பகை நீங்கி, புகழ் சேர்க்கும் நரசிம்மர் விரதம்

Published On 2018-11-01 07:22 GMT   |   Update On 2018-11-01 07:22 GMT
சுவாதி நட்சத்திரத்தன்று மாலை வேளையில் நரசிம்மரை விரதம் இருந்து வழிபட்டால் வாயுவேகத்தில் வந்து பாதுகாத்து அவர் அருள் செய்வார்.
நரசிம்ம மூர்த்தியைத் தியானம் செய்பவர்கள் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். அஷ்டத் திக்குகளிலும் புகழ் பெற்று விளங்குவர். நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுவதால் கொடிய நீண்ட காலத்துன்பம் நீங்கும்.

மனோ வியாதி, கடுமையான பாவங்களினால் ஏற்படும் துன்பங்கள் விலகும். பசி, பிணி, மூப்பு, பொறாமை, பில்லி, சூனியம், ஏவல் உள்பட சகல தோஷங்களும், துரோகங்களும் இன்னல்களும் மறையும். நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும்.

பால், இளநீர் அபிஷேகமும் பானகமும் நரசிம்மருக்கு மிகவும் விருப்பமானவை. விரதம் இருந்து நீராஞ்சனம் என்னும் நெய்தீபம் ஏற்றி 16 சுற்றுகள் பிரதட்சணமாக நரசிம்மரை வலம் வந்து மிகுந்த பக்தியுடனும் ஆழ்ந்த பக்தியுடனும் வழிபடுபவர்களின் பிரார்த்தனைகள் வெகுவிரைவில் நிறைவேறுகிறது.

சுவாதி நட்சத்திரத்தன்று மாலை வேளையில் நரசிம்மரை விரதம் இருந்து வழிபட்டால் வாயுவேகத்தில் வந்து பாதுகாத்து அவர் அருள் செய்வார். தொடர்ந்து சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு கடன் தொல்லைகள் நீங்கி செல்வச் செழிப்புகள் ஏற்படும்.

வியாபாரம் அபிவிருத்தியாகும்.மேலும் ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தடைகள், பிரச்சினைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

Tags:    

Similar News