ஆன்மிகம்

செல்வத்தை அளிக்கும் விரதம்

Published On 2018-08-24 03:15 GMT   |   Update On 2018-08-24 03:15 GMT
செல்வத்தை அளிக்கும் வரலட்சுமியை வரவேற்கும் விதமாக இல்லம்தோறும் செய்யப்படும் பூஜைதான் வரலட்சுமி விரதமாகும்.
செல்வத்தை அளிக்கும் வரலட்சுமியை வரவேற்கும் விதமாக இல்லம்தோறும் செய்யப்படும் பூஜைதான் வரலட்சுமி விரதமாகும். வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நாளன்றுதான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரியம் லட்சுமி ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற எட்டு (அஷ்ட) லட்சுமிகளாக வழிபடுகிறோம்.

வரலட்சுமி விரதம் அன்று இந்த எட்டு லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும். சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள்.
இதேப்போல, திருமணமாகாத கன்னிப்பெண்கள், மங்கல வாழ்க்கை அமைய வேண்டி வரலட்சுமி விரதம் இருந்தால் விரைவில் திருமணமாகி விரும்பியபடி கணவன் அமைவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கல வாழ்க்கை அமையும் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும்.

வரலட்சுமி நோன்பு என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டி மேற்கொள்ளப்படும் நோன்பாகும். கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத் தோடும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடை பிடிக்கின்றனர்.

அன்று முழுவதும் அஷ்டலட்சுமி தோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யவேண்டும். மாலை நேரத்தில் உற்றார், சுற்றார் வீடுகளுக்குச் சென்று ஒருவருக்கொருவர் தாம்பூலம் பெற்றுக்கொள்வது நல்லது.

Tags:    

Similar News