இஸ்லாம்
கலிபா மஸ்தான் சாஹிப் சந்தனம் பூசிவிட்டு வெளியே வந்தபோது அவரை முஸ்லிம் ஜமாத்தார்கள் தூக்கி கொண்டு சென்ற காட்சி.

நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி

Published On 2022-01-17 03:51 GMT   |   Update On 2022-01-17 03:51 GMT
தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப் நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார். இந்த நிகழ்ச்சியில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 45 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
நாகை மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு கந்தூரி விழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் கடந்த 13-ந் தேதி நடந்தது.

இதை தொடர்ந்து தர்காவின் பரம்பரை கலிபா மஸ்தான் சாகிப் நாகூர் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார். இந்த நிகழ்ச்சியில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 45 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

சந்தனம் பூசும் நிகழ்ச்சியையொட்டி நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், முருகவேல், அப்துல் கபூர், கென்னடி முன்னிலையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News