இஸ்லாம்
அரபு சாகிப் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழா

அரபு சாகிப் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழா

Update: 2022-05-06 03:57 GMT
முத்துப்பேட்டை தெற்குத்தெருவில் உள்ள அரபுசாகிப் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழாவில் பள்ளிவாசலில் இருந்து கந்தூரி பூ பல்லக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
முத்துப்பேட்டை தெற்குத்தெருவில் உள்ள அரபுசாகிப் ஆண்டவர் பள்ளிவாசலில் கந்தூரி விழா நடந்தது. இதையொட்டி நடந்த ஊர்வலத்தை தமிழக தர்காக்கள் முன்னேற்ற பேரவை நிறுவன தலைவர் பாக்கர்அலி சாஹீப் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து அரபு சாஹிப் ஆண்டவர் பள்ளிவாசலில் இருந்து கந்தூரி பூ பல்லக்கு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.

இதில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட 2 பூப்பல்லக்குகள், கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட 2 ரதங்கள், மின் விளக்குகளால் உருவாக்கப்பட்ட ஏராளமான மின் தட்டிகள் வலம் வந்தன. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். ஊர்வலத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, இன்ஸ்பெக்டர் ஜெய்க்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News