இஸ்லாம்
தர்காவை சுத்தம் செய்ய மீனவ பெண்கள் தண்ணீர் எடுத்து வந்தனர்.

ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா தொடக்கம்

Published On 2022-06-03 04:46 GMT   |   Update On 2022-06-03 04:46 GMT
ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா மவுலீது ஓதப்பட்டு தொடங்கியது. இதையொட்டி தர்காவை சுத்தம் செய்ய மீனவ பெண்கள் தண்ணீர் எடுத்து வந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா மவுலீது ஓதப்பட்டு தொடங்கப்பட்டது. திருவிழாவையொட்டி இந்து சமுதாய மீனவ பெண்கள் தண்ணீரை கொண்டு வந்து ஏர்வாடி தர்காவை சுத்தம் செய்வது காலம்காலமாக நடந்து வருகிறது.

இதன்படி நேற்று மீனவ பெண்கள் கடல்நீரை குடங்களில் ஒரு கிலோ மீட்டர் தூரம் தலையில் சுமந்து வந்து தர்காவில் உள்ள அனைத்து இடங்களையும் சுத்தம் செய்தனர். விழாவில் வருகிற 11-ந் தேதி மாலை கொடியேற்றம் நடைபெறுகிறது. 23-ந்தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.

30-ந் தேதி மாலை கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது என்று ஏர்வாடி ஹத்தார் நிர்வாக சபையின் கமிட்டியாளர்கள் தகவல் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் பக்கீர் சுல்தான், துணைத் தலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் சிராஜுதீன் ஆகியோர் தலைமையில் முன்னாள் தலைவர் அம்ஜத் உசேன், தர்கா ஹக்தார் நிர்வாக சபையின் உறுப்பினர்கள், உலமாக்கள் ஆகியோர் முன்னிலையில் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News